Thursday, July 19, 2007

சினிமா டிக்கெட் விற்கும் அதிகாரிகள்

"பெரியார்' திரைப்படம் மே 1ம் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. இப்படத்திற்கான சினிமா டிக்கெட்டுகள் முதலில் தி.க., - தி.மு.க., போன்ற அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து போலீசார், போக்குவரத்துத் துறையினர், வருவாய் துறையினர் ஆகியோரிடம் டிக்கெட் வழங்கப்பட்டு விற்றுத் தரும்படி கேட்கப்பட்டு வருகிறது. ஆத்தூர், கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட போலீசார், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உயர் அலுவலர்கள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் சினிமா டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். தலைவாசல், காட்டுக்கோட்டை, வீரகனூர் வருவாய் பிர்க்காவிற்குட்பட்ட பகுதியில் ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்கள் ஜாதி மற்றும் வருமான சான்றிதழ் கேட்டு மனு அளிப்பவர்களிடம் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 comment:

Deepak Vasudevan said...

முற்காலத்தில் லாட்டரி சீட்டு விற்ற அனுபவமுள்ளவர்களை போட்டால் விற்பனை இன்னும் அமோகமாக 'அள்ளும்' அல்லவா?