Friday, July 20, 2007

முதலாளிகள் பார்ப்பனர்களாக இருந்தால் அது பார்ப்பன பத்திரிகை என்று முத்திரை குத்துவதா?

தினமலர்பத்திரிகையை பார்ப்பனர்கள் பத்திரிகை என்று கூறுவது சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. ஆனால் முதலாளிகள் பார்ப்பனர்களாக இருக்கலாம்; ஆனால் அங்கு முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அனைவருமே மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இன்று நேற்றல்ல அந்த பத்திரிகை துவங்கிய நாளிலிருந்தே அதில் முக்கிய பதவிகளை வகித்த பலரை எனக்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களில் சிலருடைய பெயர்களையும் அவர்கள் வகித்த பதவிகளையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். துவக்க காலத்தில் தினமலரில் செய்திப் பிரிவு பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் திரு. மைக்கேல், பாலகிருஷ்ணன், உமைதாணு. அதன் பிறகு தற்போது திரு. இளங்கோவன், திரு. லெனின், திரு. பால்ராஜ், திரு. ரமேஷ்குமார், என்று பலரும் செய்திப்பிரிவு மற்றும் நிருபர் பிரிவு பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். இன்று உங்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான தினமலர் இணை தளப் பொறுப்பாளரும் பிராமணர் அல்ல. இதேபோல் அலுவலக நிர்வாகிகளாக திரு. பீட்டர், திரு. அமல்ராஜ், திரு. பாலமுருகன் போன்றவர்கள் பணி புரிந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் இன்றும் அதே பொறுப்பில் இருந்து வருகிறார்கள். தொழில்நுட்ப பிரிவிலும் திரு. ஜோசப் போன்றவர்கள் இருக்கின்றனர். புகைப்பட நிபுணர்களாக விளங்குபவர்கள் திரு. முருகராஜ், திரு.சாதிக்.விற்பனை பிரிவில் பணியாற்றியவர்கள் திரு. சாலமன் ஜெபராஜ் போன்றவர்கள். இதைöல்லாம் ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் தினமலர் நாளிதழில் பணியாற்ற திறமை மட்டும்தான் தேவை; பிராமணர் என்ற ஜாதியில்லை என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

ஈரை பேனாக்கும் தினகரனின் வேலை

இது நிச்சயமாக ஈரை பேனாக்கும் தினகரனின் வேலை என்பதும் நிதர்சனம்.தினமலரின் இப்போது இருக்கும் பிரச்சனைகளில் மேலும் ஒன்றை வலியத்திணித்தால் அது செயலிழக்கும் என்ற எண்ணத்தில்...

ஈரை பேனாக்கும் தினகரனின் வேலை

இது நிச்சயமாக ஈரை பேனாக்கும் தினகரனின் வேலை என்பதும் நிதர்சனம்.தினமலரின் இப்போது இருக்கும் பிரச்சனைகளில் மேலும் ஒன்றை வலியத்திணித்தால் அது செயலிழக்கும் என்ற எண்ணத்தில்...

கேவலமான முன்னுதாரணம

குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா என்று நிரூபணமாகாத சூழ்நிலையில் புனைபெயரில் இயங்கிவரும் ஒரு பத்திரிகையாளர் மீது மோசமான வண்ணத்தில் வெளிச்சம் போட்டு அவரது படத்தையும் பிரசுரித்திருப்பது கேவலமான முன்னுதாரணம

Thursday, July 19, 2007

சினிமா டிக்கெட் விற்கும் அதிகாரிகள்

"பெரியார்' திரைப்படம் மே 1ம் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. இப்படத்திற்கான சினிமா டிக்கெட்டுகள் முதலில் தி.க., - தி.மு.க., போன்ற அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து போலீசார், போக்குவரத்துத் துறையினர், வருவாய் துறையினர் ஆகியோரிடம் டிக்கெட் வழங்கப்பட்டு விற்றுத் தரும்படி கேட்கப்பட்டு வருகிறது. ஆத்தூர், கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட போலீசார், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உயர் அலுவலர்கள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் சினிமா டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். தலைவாசல், காட்டுக்கோட்டை, வீரகனூர் வருவாய் பிர்க்காவிற்குட்பட்ட பகுதியில் ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்கள் ஜாதி மற்றும் வருமான சான்றிதழ் கேட்டு மனு அளிப்பவர்களிடம் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.